
இந்த கருத்துக் கணிப்பு 200 இடங்களில் 3757 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இந்த கருத்து கணிப்பு சுமார் 50 தொகுதிகளை தொட்டுச் சென்றுள்ளது.
காங்கிரசுக்கு வளர்ச்சி ஆகஸ்ட் மாதம், இதே சர்வே அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்திய பகுதிகளில் இருந்து இது மாறுபட்டது. இருப்பினும் இரு முறை எடுத்த கருத்து கணிப்பில் பல்வேறு மாற்றங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. உதாரணத்திற்கு பாஜகவுக்கு ஆதரவு குறைவதும், காங்கிரசுக்கு ஆதரவு அதிகரிப்பதும் அம்பலமாகியுள்ளது.
காங்கிரசுக்கு முன்னேற்றம் இந்த லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் பாஜகவின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 41 என்ற அளவிலும் இருப்பது தெரியவந்துள்ளது. காங்கிரசுக்கு இது 12 சதவீதம் கூடுதல் வாக்குகள் என்பது கவனிக்கத்தக்கது. பாஜகதான் இப்போதும் லீடிங்கில் இருக்கிறது என்றபோதிலும், முந்தைய கருத்துக் கணிப்புடன் ஒப்பிட்டால் காங்கிரஸ் படு வேகமாக முன்னேறியுள்ளது தெரியவருகிறது.
இளைஞர்கள் நம்பிக்கை அதேநேரம், இளைஞர்களிடம் பாஜக செல்வாக்கு குறைந்துள்ளது. 18 முதல் 29 வயதுவரையிலான இளைஞர்கள் மத்தியில் ஆகஸ்ட் மாதம் பாாஜகவுக்கு 63 விழுக்காடு ஆதரவு இருந்தது. ஆனால், புதிய கருத்துக் கணிப்பில் அது 44 சதவீதமாக குறைந்துள்ளது. நடுத்தர வயதினரைவிட இளைஞர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.
அதிகம்தான், ஆனாலும் வீழ்ச்சி அக்டோபர் மாத கருத்துக் கணிப்பில் இளைஞர்களில் 42 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது 14 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் பாஜகவுக்கு 44 சதவீதம் இளைஞர்கள் ஆதரவு இருந்தபோதிலும், இது கடந்த கருத்துக் கணிப்பைவிட 19 சதவீதம் குறைவாகும். இதன் மூலம் குஜராத் இளைஞர்கள் ஆதரவை பாஜக வேகமாக இழந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
பக்குவப்பட்ட வாக்காளர்கள் 30 முதல் 39 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களில் 43 சதவீதம் பேர் காங்கிரசுக்கும், 49 சதவீதம் பேர் பாஜகவுக்கும் ஆதரவு அளிக்கிறார்கள். காங்கிரசுக்கு 12 சதவீத லாபமும், பாஜகவுக்கு 9 சதவீத நஷ்டமுமாகும். 40 முதல் 59 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுள்ள வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் காங்கிரசுக்கும், 47 சதவீதம் பேர் பாஜகவுக்கும் ஆதரவு அளித்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் 40 சதவீதம் பேர் காங்கிரசுக்கும், 50 சதவீதம் பேர் பாஜகவுக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.
முதல்வராக யாருக்கு ஆதரவு? பாஜகவின் விஜய் ருபானி முதல்வராக 18 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. இதுவும் கடந்த கருத்துக் கணிப்புடன் ஒப்பிட்டால் 6 சதவீத இறங்குமுகமாகும். பாஜகவின் அனந்திபென் பட்டேலுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். இது 2 சதவீத அதிகரிப்பு. காங்கிரசின் பாரத்சிங் சோலங்கி முதல்வராக 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். இது 5 சதவீத வளர்ச்சி. அதேநேரம் குஜராத்திற்கு மோடியே முதல்வராக வேண்டும் என்று 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கடந்த கருத்து கணிப்பைவிட2 சதவீதம் குறைவாகும்.
வாய்ப்பே கிடையாது குஜராத்தில் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சியை பிடிக்க வாய்ப்பு தரலாமா என்ற கேள்விக்கு ஆகஸ்ட் மாதம் 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அக்டோபர் இறுதியில் அது 41 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக மீண்டும் குஜராத்தை ஆள வாய்ப்பு தரக்கூடாது என்று ஆகஸ்டில் 25 சதவீதம் பேர் கூறியிருந்த நிலையில் அது தற்போது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Comments