
அதேநேரம், கணவனிடம் அன்பு கிடைக்கவில்லை என்பதால் பெண் இப்பிட செல்வதாக காட்டுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். அதிலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள பெண்கள் சிலர் இதை ஆதரித்து பதிவிட்டுள்ளனர்.
அரவணைப்பில்லை இதுகுறித்து சபரிநிவாஸ் இளங்கோவன் என்பவர் பேஸ்புக்கில் கூறியதை பாருங்கள்: அதிகாலை எழுந்து,சமைத்து முடித்து,வீட்டு வேலைகளை முடித்து கணவனையும், குழந்தையையும் அனுப்பிவிட்டு, தானும் வேலைக்கு சென்று சோர்வடைந்து வந்து எவ்வித அன்பும் அரவணைப்புமின்றி இரவில் கணவனின் உடல் பசியை ஆற்றிவிட்டு, தன் உடல் பசியை ஆற்ற தன் கணவனால் இயலவில்லையே என்ற ஆற்றாமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படுகின்றாள் லெக்ஷ்மி. நிற்க..!
அரவணைப்பு ஆதரவற்று நிற்கும் நிலையில் கூட தன் கணவன் தன்னை பற்றி கவலைகொள்ளாமல் அதிகாலை சமையலுக்கு என்ன செய்வது என? கேட்கும் அந்த கேள்வியில் மனமுடைந்து நிற்கையில் தனக்காகவே இருக்கும் ஒரு "முன் பின் நவீனத்துவ" கவிஞனின் அரவணைப்பு கிடைக்கின்றது.
குழந்தைக்கு அம்மா சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவனுக்குள் இருந்த அமைதிப்படை அமாவாசையானவன் அல்வா ரூபத்தில் சிறிது உப்புமாவை சாப்பிடக்கொடுத்து பசியாற்றிவிட்டு, பாரதியார் பாடல்களை பாடி அவளை பரவசமடைய செய்து படுக்கைக்கு அழைக்கையில்... "உங்க சமையலும், பாரதியார் பாடலும் நல்லா இருந்துச்சி, ரொம்ப சந்தோஷமா இருந்தேன், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் வாழ வேண்டும் என்றால், வீட்டில் எனக்காக காத்திருக்கும் என் மகனின் அம்மாவாகவே நான் வீட்டுக்கு போக ஆசைப்படுகின்றேன், அதனால் கொஞ்சம் தள்ளி இருங்க" என கூறிவிட்டு அங்கிருந்து அவள் எழுந்து செல்லும்படி காட்சி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அந்த லெக்ஷ்மி கொண்டாடப்பட்டிருப்பாள்.
கணவனுக்கும், மனைவிக்கும் வித்தியாசம் இல்லை அந்த கணவன் துப்பப்பட்டிருப்பான். ஆனால் இப்போது அந்த கணவனுக்கும், இந்த மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் பாவம். இது போன்ற புரட்சிப்படங்களை கொண்டாடும் இந்த சமூகத்தையும், பெண்களையும் பார்க்கையில் ஒன்று மட்டும் தெரிகின்றது, இனிவரும் காலங்களில் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா - பாரதியார்".
Comments