செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல் கமிஷன் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. எங்கள் பக்கம் நியாயம் இருப்பதால் தேர்தல் கமிஷன் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். என்றார்.
அதிமுக தரப்பில் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜரான வக்கீல் பாபு முருகவேல் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினகரன் தரப்பு ஆவணங்களில் முரண்பாடு இருந்தது. பொதுக்குழு கூட்டியதன் ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தோம். ஐக்கிய ஜனதா தளம் தொடர்பான தீர்ப்பும் எங்களுக்கு எதிர்காலத்திலும் உதவும்.
* நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி - அமைச்சர் தங்கமணி.
* இது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நாள், - அமைச்சர் காமராஜ்.
Comments