முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை: அமைச்சர்

 முட்டை, வழங்கல், நிறுத்தப்படவில்லை, அமைச்சர்கோவை: பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை என அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவையில் நடந்த கூட்டுறவு விழாவில் , அமைச்சர் வேலுமணி பேசியதாவது: பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை.பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உடன் வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது. முட்டை விலை உயர்வை அடுத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சென்னையில் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Comments