சென்னை:'மது கடைகளை திறக்க, உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க., அரசு வாதாடுவது வேதனை அளிக்கிறது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'மதுவிலக்கு, படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை கொண்டு வரப்படும்' என, 2016 சட்டசபை தேர்தலில், வாக்குறுதி அளித்து விட்டு, இன்று புதிதாக, மதுக் கடைகளை திறக்க, உச்ச நீதிமன்றம் வரை, அரசு வாதிடுவது வேதனை அளிக்கிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்து வரும் விபத்துகளால், பல குடும்பங்கள், தங்கள் எதிர்காலத்தை தொலைத்து, தெருவில் நிற்கின்றன. இந்த கடைகளால், தங்களின் வாழ் வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் ஆபத்தை யும், சமாளிக்க முடியாமல், பெண்கள் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.
'குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட் போம்' என, வாக்குறுதி அளித்து விட்டு, இன்றைக்கு, குடிப் பழக்கத்தை ஊக்குவித்து, அதிகரித்திடும் அபாயப் பாதையில், ஆர்வத்துடன் பயணிக்கும் இந்த அரசை, மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொண்டை வலி
சமீபத்தில், துபாய், லண்டன் என, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், சென்னை திரும்பியதும், மழை பாதிக்கப்பட்டபகுதிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, மதுரையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்புக்கு எதிராக நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
பின், சென் னை திரும்பிய ஸ்டாலின், மீண்டும் முடிச்சூர், கொளத்துார் பகுதிகளில் ஏற்பட்ட, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். வெளிநாடு பயணத்தை முடித்து வந்த பின்,ஓய்வு எடுக்காமல், தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டதால், அவருக்கு, தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.அதற்காக, வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
பேசுவதற்கு சிரமப்பட்டதால், இரு நாட்களாக, அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வரவில்லை. இதனால், அவரை சந்திக்க முடியாமல், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் என, கட்சி வட்டாரம் தெரிவித்தன.
Comments