
பெங்களூரு நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் நிலையில் டெலிகாம் துறையில் இதன் எண்ணிக்கை சற்றுகுறைவாகவே உள்ளது. இதனையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக மக்களுக்குச் சேவை வழங்கி வருகிறது இந்தப் பெங்களூரு நிறுவனம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் துவங்கி 13 மாதங்கள் மட்டும் ஆகியுள்ளது.
வைபை டப்பா வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் டேட்டா கட்டணம் சற்று அதிகமாகவே உள்ளது. ஜியோ அறிமுகத்திற்குப் பின்னும் டேட்டா கட்டணத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என்று வைபை டப்பா என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் துணை தலைவர் சுபெந்து சர்மா தெரிவித்துள்ளார்.
ஜியோவை விடவும் மலிவான கட்டணம் y காமினேட்டர் முதலீட்டில் இயங்கும் வைபை டப்பா நிறுவனம் ஏற்கனவே பெங்களூரில் சேவை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சேவை கட்டணத்தைப் பார்த்தால் ஆடிப்போயீடுவிங்க. 100MB டேட்டா 2 ரூபாய், 500MB டேட்டா 10 ரூபாய், 1ஜிபி டேட்டா 20 ரூபாய் மட்டுமே இதனைப் பயன்படுத்த 24 மணிநேரம் காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
ஜியோவுடன் ஒரு ஒப்பீடு இந்திய டெலிகாம் சந்தையிலேயே குறைவான கட்டணத்தில் டேட்டா சேவை அளிக்கும் நிறுவனமாகத் திகழும் ஜியோ-வில் 150MB டேட்டா 19 ரூபாய், 1.05ஜிரி டேட்டா 52 ரூபாய். இப்போ சொல்லுங்க எது மலிவானது என்று.
பல இடங்களில் விற்பனை வைபை டப்பா நிறுவனம் தனது டேட்டா சேவை சின்னச் சின்ன டீக கடைகள், பேக்கரிகள் எனப் பெங்குளூரின் பல இடங்களில் ப்ரீபெய்டு டோக்கன் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.
இம்சை இல்லை.. இதனைப் பயன்படுத்த யாரும் ஆப் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை, ஓடிபி கொண்டு ஒரு டச் செய்தால் போதும் இண்டர்நெட் கனெக்ட் ஆகிவிடும். இது ஹோட்டல்களில் பயன்படுத்துவதைப் போன்றது. ஆதலால் மக்களுக்கு எவ்வித இம்சையும் இருக்காது.
ஐஎஸ்பி வைபை டப்பா நிறுவனம் ஐஎஸ்பி உரிமம் கொண்டுள்ளது, கடைகளில் பைபர் ஆப்டிக் இணைப்புக் கொண்ட சிறு ரவுட்டர்கள் மூலம் சேவை அளித்து வருகிறது இந்நிறுவனம். குறைந்த விலையில், அதிவேகமான டேட்டாவை அளிப்பதே எங்களது லட்சியம் இதுவும் 2 ரூபாய்க்கு அளிப்பதன் மூலம் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் ஈர்க்க எங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் எங்களது இணையத் தளத்தின் வாயிலாகவும் தேவையான அளவிற்கு டேட்டவை பெற முடியும் எனச் சர்மா கூறுகிறார்.
350 இடங்கள் இதுவரையில் வைபை டப்பா பெங்களூரில் மட்டும் சுமார் 350 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் 1800க்கும் அதிகமானோர் இணைப்பிற்காகக் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய இணைப்பை கொடுக்க, ஒரு இணைப்பிற்கு 6-7 நாட்கள் வரையில் ஆகிறது, இதனை 3-4 நாட்களாகக் குறைக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகளைச் செய்து வருகிறது வைபை டப்பா.
4000 ரூபாய் ஒரு இணைப்பு உருவாக்க இந்நிறுவனத்திற்கு 4,000 ரூபாய் வரையில் செலவாகிறது. இதுவே 20 டப்பாக்களை உருவாக்கும் பட்சத்தில் ஒரு டெலிகாம் டவர் செய்யும் வேலையை இந்த டப்பா செய்து விடும். ஆனால் ஒரு டெலிகாம் டவர் நிறுவன 1-2 கோடி ரூபாய் வரையில் செலவாகும். இந்நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் செலவினங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டதன் மூலம் இத்தகைய குறைந்த கட்டணத்திலும் லாபத்தைப் பார்க்க முடியும்.
4 வருட திட்டம்.. அடுத்த 3-4 வருடத்தில் இந்நிறுவனம் ஒரு லட்ச வைபை டப்பாக்களை நிறுவ வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
நிறுவன தகவல் நிறுவனத்தின் பெயர்: வைபை டப்பா தலைவர்கள்: சுபெந்து சர்மா மற்றும் காரம் லக்ஷமன் இடம்: பெங்களுரூ ஊழியர்கள் எண்ணிக்கை: 32 பேர்
Comments