
நேற்று முதல் வெயில் இதனால் சென்னையில் நேற்று முதல் வெயில் காய்ந்து வருகிறது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை ஏதும் பெய்யவில்லை.
திங்கள் செவ்வாயில்.. இந்நிலையில் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீண்டும் மழை தொடங்கும் என நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பகல் பொழுதில் கொட்டும் திங்கள் கிழமை காலை 11 மணிக்குப் பிறகு இரவு வரை இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை பகல் வரை மிதமான மழை பெய்யும் என்றும் பிற்பகலில் கனமழை வெளுக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமைக்கு பின் இருக்காது புதன் கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதனை தொடர்ந்து சென்னையில் மழை இருக்காது என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இதுவரை நார்வே வானிலை மையத்தின் கணிப்புகள் பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments