சென்னை: இது நாள் வரை தமிழக அரசு மீது கருணை காட்டி வந்த பா.ஜ., தலைமை, இனி, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் சுட்டிக் காட்டத் தவற வேண்டாம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்தால், அதையும் ஆதாரத்துடன் கண்டறிந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.இதையடுத்து, தமிழக அரசை தமிழக பா.ஜ., தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.
இதற்கிடையில், கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகளுக்கும், தமிழக அரசில் நடக்கும் ஊழலை ஆதாரத்துடன் கண்டறிந்து கொடுக்குமாறு, கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, ஊழலை தேடிப் பிடித்து கண்டுபிடிப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் தேடும் பணியில், தீவிரமாக களம் இறங்கி உள்ளனர், தமிழக பா.ஜ., நிர்வாகிகள்.
Comments