சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது சாதிக் அலி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. ஆனால், இப்போது அந்த தீர்ப்பை பின்பற்றியுள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்பது இந்திய மககள் அனைவருக்கும் தெரியும்.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். சாதிக் அலி வழக்கு, அ.தி.மு.க.,விற்கு பொருந்தாது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம், மத்திய அரசின் விருப்பத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது நிருபணமாகி உள்ளது.
இதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது இரட்டை இலை சின்னம், குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது. அதை மீட்போம். தேர்தல் ஆணையம் தீர்ப்பு மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது நிருபணமாகி உள்ளது. அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் தான் மீண்டும் போட்டியிடுவேன். வெற்றி பெற்று, இரட்டை இலையை மீட்பேன். தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல உள்ளது. இவ்வாறு தினகரன் கூறினார்.
Comments