
சுட்டது கடலோர காவல்படை இல்லை ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, மீனவர்களை சுட்ட குண்டு யாருடையது என தெரியாது என கூறியிருந்தார். தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமன் சொல்வது சரியே என கூறியிருந்தார்.
சுட்டது கடலோர காவல்படையே இந்நிலையில் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தங்கச்சிமடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான். மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானதே.
காரணம் தெரியவில்லை துப்பாக்கிச் சூடு நடத்திய அபாக்கா கப்பல் சென்னையைச் சேர்ந்தது. நடுக்கடலில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசைப்படகை மீனவர்கள் நிறுத்தாமல் சென்றதால் துரத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்திருக்கலாம்.
நிர்மலா கருத்து இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரப்பர் குண்டு என கருத்தில் கொண்டு கடலோர காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருக்கலாம். இவ்வாறு ராமாராவ் கூறினார்.
Comments