
இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இரவில் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
Comments