மன்னிப்பு கேட்டது இந்திய கடலோர காவல்படை

இந்திய கடலோர காவல்படை,Indian Coast Guard, மன்னிப்பு,Sorry, பேச்சுவார்த்தை ,negotiation, தமிழக மீனவர்கள், Tamil nadu fishermen, துப்பாக்கிச்சூடு, gunfire,ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய கடலோர காவல்படையினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மறுப்பு

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த சம்பவத்தை இந்திய கடலோர காவல்படையினர் மறுத்தனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மண்டபம் முகாமில் கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடலோர காவல்படை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்காது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக மீனவர்கள் கூறியுள்ளனர். 

மீனவர்களுடன் நட்புறவை ஏற்படுத்த இது போன்று மாதந்தோறும் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Comments