தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத் திட்டங்கள், தமிழக அரசால் மேற்கொள்ளப் படுகின்றன.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு, 'லேப் - டாப்' வழங்கும் திட்டமும் ஒன்று. 2016 - 17ல், பிளஸ் 2 முடித்தோருக்கு, சில வாரங்களாக, லேப்-டாப் வழங்கப்படுகிறது.
ஆள் மாறாட்டம் நடக்காமல் தடுக்க, நேரடியாக, மாணவர்களிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பல பள்ளிகளில், அந்தந்த பகுதி அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தினரின் தலையீட்டால், மாணவர்கள் பெயரில், மற்றவர் களிடம், லேப் - டாப் வழங்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.
இதனால், முறைகேடு நடந்துள்ளதாஎன்பதை கண்டறியவும், மீதமுள்ள, லேப் - டாப்களை வழங்கு வதில், விதிமீறல் இல்லாமல் தடுக்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
* சம்பந்தப்பட்ட மாணவரிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும். அதை, பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில், மாணவர்கள், சம்பந்தப் பட்ட வகுப்பு ஆசிரியரிடமும், கையெழுத்து பெறவேண்டும்
* மாணவரின் பிளஸ் 2 தேர்வு, ஆதார், மொபைல் போன் எண்கள், மாணவர்களின் பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்றவற்றை, அரசு வழங்கிய ரசீதில் குறிப்பிட வேண்டும்
* மாணவர்கள் இன்றி, அவர்களின் பெயரை கூறி வரும் யாரிடமும், லேப் - டாப் வழங்க கூடாது. பள்ளிகளில், லேப் - டாப் வினியோகம் துவங்கி, மூன்று வாரங்கள் வரை, மாணவர் வரா விட்டால், அதை, பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* பள்ளிகள் தோறும், லேப் - டாப் வழங்கப்பட்ட மாணவர்களில், 10 சதவீதம் பேரை, தோராய மாக தேர்வு செய்து, அவர்களின் வீடுகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், நேரடி, திடீர் கள ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்ததற்கு, மாணவர்கள், பெற்றோரிடம் கையெழுத்து பெற்று, விபர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments