
அமைச்சர் செல்லூராரும் விடாது கருப்பாய் எங்கு போய் எதைப் பேசினாலும் மீம்ஸ்காரவுகளுக்கு ஏற்ற மாதிரியே எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவிலும் வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் அமைச்சர் செல்லூரார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எல்லாருமே காலையிலே சோர்ந்து போய் உட்கார்ந்தா எப்படி? என்னால் பேச எப்படி முடியும்? எல்லாரும் சுறுசுறுப்பாக இருங்கள் என்று கூறியதுடன் அடுத்ததாக ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். ஆம் "இந்த கூட்டுறவு வார விழாவில் 2 கோடி பயனாளிகள் வந்துள்ளீர்கள். எனவே உற்சாகமாக கை தட்டுங்கள்" என்றாரே பார்க்கலாம்.. மேடையில் இருந்த அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள், பயனாளிகள் எல்லோரும் அப்படியே 'ஷாக்' ஆகிப் போனார்கள். மொத்தமே 100 பேர் கூட இல்லாத விழாவில் 2 கோடி பேர் வந்துள்ளதாக அடித்துவிட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். பின்னர்தான் புரிந்தது.. .ரூ2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ள பயனாளிகளே என்று பேசுவதற்கு பதிலாக 2 கோடி பயனாளிகளே என சுருக்கமாக பேசிட்டாராம் செல்லுராராம். அட மக்கா!
Comments