இது தொடர்பான விவரம் வருமாறு
* மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் , 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது.
* தினகரன் தரப்பில் தாக்கலான 1280 , பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது.
* கட்சியின் பொதுக்குழுவே தொண்டர்களின் பிரதிபலிப்பாக கொள்ள முடியும்.
* தினகரன் அணிக்கு 20 , பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர்.
* அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது.
* லோக்சபாவில் 34 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும் ஆதரவாக உள்ளனர்.
* ராஜ்யசபாவில் முதல்வர் அணிக்கு 8 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும், ஆதரவாக உள்ளனர்.
* மார்ச் 22 ம் தேதி இரட்டை இலையை முடக்கிய கமிஷன் உத்தரவு வாபஸ்
* அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம்.
* அ.தி.மு.க., கட்சி , கொடி, அலுவலகம் அனைத்தும் பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம்.
* அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபா உரிமை கோர முடியாது
* ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி குழப்பத்தின் போது எடுக்கப்பட்ட முடிவே இப்போதும் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Comments