சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் வறுபடும் அரசியல் தலைவர்களில் ஒருவர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்திரராஜன். இது குறுத்து இவரிடம் ஒரு பேட்டியின் போது எழுப்பட்ட கேள்வியில் : ‛‛ நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன் இதனால் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜ., தலைவர் வலிமையான இருப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால் எனது. உயரம், தோற்றம், தலை முடி ஆகியவற்றை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறேன். எனது விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று தமிழிசை என்ற என் பெயரை ‛டுமிழிசை ' என மாற்றம் செய்தனர். அவர்களை பார்த்து நான் சிரிக்கிறேன். இதனால் எனக்கு கவலையில்லை'' என தெரிவித்துள்ளார்.
Comments