இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை

இரட்டை இலை,irattai ilai, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,  துணை முதல்வர் பன்னீர்செல்வம் , Deputy Chief Minister Panneerselvam, தேர்தல் ஆணையம்,Election Commission,  ஆர்கே நகர் இடைத்தேர்தல்,RK nagar by election, தினகரன், Dinakaran,  சசிகலா,Sasikala, இ.பி.எஸ்., EPS, ஓ. பி.எஸ்.,OPSபுதுடில்லி: முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. 

பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சிக் கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் தரப்பு பயன்படுத்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
பின்னடைவு

நீண்டகாலம் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் அணியில் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சின்னம் கிடைக்காதது, சசிகலா, தினகரன் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Comments