துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கடிதம்

துப்பாக்கிச்சூடு,சம்பவம்,குறித்து,முதல்வர்,பழனிசாமி பிரதமருக்கு,கடிதம்சென்னை: தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். 
கடந்த 13-ம் தேதி எல்லை பகுதிக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.. இனி எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்த வேண்டும் . இச்சம்பவத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments