இது குறித்து அவர் கூறுகையில், நவம்பர் 10 முதல் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுப்பெற்று தொடர்ந்து அதே இடத்தில் உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடதிசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடதிசை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் நாளை (நவ.,14) முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக எண்ணூரில் 11 செ.மீ.,ம், நுங்கம்பாக்கம், பொன்னேரி, மாதவரத்தில் 7 செ.மீ.,ம் மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் விழுப்புரம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments