வாய்ப்பு
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஆடிட்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தொடர்ந்து வரி கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை, வருமான வரித்துறையினர் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், கடவுள் நிச்சயம் கண்டுபிடிப்பார். கணக்குகள் ஆய்வு மற்றும் பல்வேறு காரணங்களால், வருமான வரித்துறை ஆடிட்டர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது. இதனை நீங்களும் மனதில் வைத்து, எங்களுக்கு உதவ வேண்டும்.
ஏழைகளுக்கு உதவும்
வரி கட்டுபவர்களுக்கு சாதகமாக வருமான வரித்துறை அதிகாரிகளும், ஆடிட்டர்களும் சட்டங்களை பயன்படுத்தி செயல்படும் போது பிரச்னை ஏற்படுகிறது. வரி கட்டினால் ஏழைகளுக்கு உதவும் என மக்கள் நினைத்தால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Comments