
சோதனைகள் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையில் இருந்து பென் டிரைவ்கள், இரு லேப்டாப்கள், கடிதங்கள் என ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. போயஸ் தோட்டத்தில் இருந்து ஒரு சிறிய டெம்போ அளவுக்கு ஆவணங்கள், பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.
விவேக் அனுமதிக்கவில்லை ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்த விவேக் ஜெயராமன் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த அறையில் பாதாள அறைகள் இருப்பதாக அந்த காலத்திலேயே பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டே வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏராளமான ஆவணங்கள் அந்த பாதாள அறையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடியவர்கள் சசிகலாவும், விவேக் ஜெயராமனும். மேலும் பூங்குன்றனும் அந்த வீட்டில் தங்கியிருந்தார். மேலும் அழைக்கப்படாமலேயே விவேக் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.
அறையை ஆய்வு செய்தால் உண்மை தெரியும் அங்கு ஜெயலலிதாவின் அறையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சாவி தாருங்கள் என்றும் கேட்டனர். அதற்கு விவேக் மறுத்துவிட்டார். எனவே ஜெயலலிதா அறையை ஆய்வு செய்தால் போதுமான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என்றும், பாதாள அறைகள் இருந்தால் நிச்சயம் அதிலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கப் பெறலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
Comments