அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான வரி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு பாராட்டுக்களுடன் விமர்சனங்களும் அதிகளவில் எழுந்தன. பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனாவும் மத்திய அரசை விமர்சித்து, அக்கட்சியின் நாளேடான ‛சாம்னா'வில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது: அரசியல் ஆதாயம், சுய விளம்பரத்தை பெறுவதில் பா.ஜ., குறியாக உள்ளது. குஜராத் தேர்தலை மனதில் வைத்தே ஜி.எஸ்.டி., வரி குறைப்பை பா.ஜ., செய்துள்ளது. தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே பா.ஜ., இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியில் சமரசத்துக்கு இடமில்லை என தெரிவித்தவர்கள், தற்போது எதற்காக வளைந்து கொடுக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments