தமிழகம் முழுவதும் சசி உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 5ம் நாளான நேற்று சோதனை நடந்த பல்வேறு இடங்களில் சோதனைகள் நிறைவடைந்த நிலையில் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் இன்று 6வது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது. பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைபற்றப்பட்ட நிலையில் மேலும் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்படத்தக்கது. கைபற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Comments