சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் 5வது நாளாக இன்றும் பல இடங்களில் சோதனை தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக இன்றும் தங்கள் சோதனையை தொடர்கின்றனர். மேலும் கோடநாட்டிலுள்ள கர்சன் எஸ்டேட், ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு உள்ளிட்ட பல இடங்களிலும் 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
Comments