40 இடங்களில் 3வது நாளாக இன்றும் ஐ.டி. ‛ரெய்டு'

ஐ.டி ரெய்டு ,IT RAID, ஜெயா டிவி, Jaya TV, வருமான வரித்துறை,  Income Tax Department, சசிகலா குடும்பம், Sasikala Family, தினகரன் ஜோதிடர் சந்திரசேகரன், Dinakaran astrologer Chandrasekaran, லட்சுமி ஜூவல்லர்ஸ்  ,Lakshmi Jewelers,
கடலூர்: ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரனின் உறவினர், தினகரனின் ஜோதிடர் வீடு, புதுச்சேரியிலுள்ள நகைகடை உள்ளிட்ட 40 இடங்களில் 3வது நாளாக இன்றும்(நவ.,11) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.திருப்பாத்திரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்குசந்தையில் முதலீடு செய்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி, கோடநாடு அருகிலுள்ள கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

Comments