கோவை: கோவையில் வருமான வரித்துறையினர் பல்வேறுஇடங்களில் நடத்திவரும் சோதனையில் 4 இடங்களில் நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கோவையிலும் 7 இடங்களில் காலை 9மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சோதனை நடைபெற்றுவந்த 4 இடங்களில் சோதனை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர் சிவகுமார் வீ்ட்டில் சோதனை நிறைவு
சென்னை நீலாங்கரையில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 36 மணிநேரம் வரையில் நடைபெற்று வந்த சேதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments