சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 4வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. ஜெயா டி.வி., அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது வரை நடந்த ரெய்டுகளில் பல கிலோ கணக்கில் தங்க நகைகளும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயா டி.வி.யின் சி. இ.ஓ., விவேக் நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments