சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்- வீடியோ சென்னை: வடகிழக்குப் பருவமழை தனது இரண்டாவது சுற்றை இன்று இரவு தொடங்குவதாகவும் புதன்கிழமை வரை மழை விட்டு விட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் மழை தொடர்பான சிறப்பு அப்டேட்டை பதிவிட்டுள்ளார். அதில் வடகிழக்குப் பருவமழையின் 2வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கான மேகத்திரள் கூட்டம் தமிழக வடகடலோர மாவட்டத்தில் தெரிவதாகவும் இதனால் இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments