சென்னை : டிசம்பர் 1ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் வேட்புமனு தாக்கலுக்கு நேரம் ஒதுக்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. டிசம்பர் 4ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை நாளை ஆட்சி மன்றக்குழு முடிவு செய்கிறது. பாஜகவின் நிலைப்பாடும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் டிடிவி தினகரன் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடுவாக அறிவித்துள்ளார். அவர் தொப்பி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பு ஆர்.கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் டிசம்பர் 1ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் வேட்பு மனு தாக்கலுக்கு நேரம் ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல நேரம் பார்த்து அன்றைய நாளில் தினகரன் வேட்பு மனு தாக்கலை செய்ய நேரம் கேட்டுள்ளார். இத்னிடையே அவர்கள் தரப்பு பிரச்சாரத்தை எப்போதில் இருந்து தொடங்கலாம் என்று தினகரன் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
Comments