சென்னை: சென்னை: சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், இன்றுடன் 'ரெய்டு' ( 5வது நாள்) நடந்து முடிந்தது. இதில், கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சசிகலா கும்பலிடமிருந்து ரூ. 1,430 மதிப்பிலான ஆணவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, சசிகலா சசி கும்பல் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததையும், வரித்துறை மோப்பம் பிடித்தது. நவ., 9ல், தினகரன், திவாகரன், சிறையில் இருக்கும் இளவரசியின் வாரிசான, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாகி விவேக், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா...சசிகலாவின் கணவர் நடராஜனின்,அவரது சகோதரர் ராமச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஜெயா, 'டிவி' மற்றும் நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் என, தமிழகம் முழுவதும், 187 இடங்களில் சோதனை துவங்கியது.
இந்நிலையில் இதுவரை நடந்த சோதனைகளில், கணக்கி்ல் வராத ரூ. 1,430 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரூ. 5 கோடியில் தங்க ஆபரணங்கள், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து ரூ.6 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. 7 கோடியில் 18 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக இன்று விவேக், டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரித்தனர். விசாரணையின் அடிப்படையில் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments