ஆந்திரா: கிருஷ்ணா ஆற்றில் படகு மூழ்கி விபத்து;14பேர் பலி

 ஆந்திரா, கிருஷ்ணா ஆற்றில், படகு மூழ்கி, விபத்து, 11 பேர், பலி
கிருஷ்ணா: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படகு கவிழ்ந்ததில் மேலும் சிலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் மூழ்கிய வர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணா ஆற்றிலிருந்து இதுவரை 14உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆந்திர டிஜிபி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார். படகில் 40 பேருக்கும் மேல் பயணித்துள்ளதாகவும், படகு கவிழ்ந்த பகுதியிலிருந்து 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏழு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Comments