ரெய்டு
சசிகலா குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஆதரவாளர் வீடுகளில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்த விபரங்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அறிக்கை
சோதனை தொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளியான தகவல்: அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 15 கிலோ தங்கம் மற்றும் கணக்கில் வராத ரூ.5.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெயர் அளவிலான சில போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மூலம் ரூ.150 கோடி மதிப்பு ரூ.40 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 150 வங்கிகணக்குகள், 1000 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டது. பெரும்பாலான ஆவணங்கள் விவேக், கலியபெருமாள் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
Comments