100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம் ; ஐ.டி., அதிகாரிகள் அதிரடி

100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம் ; ஐ.டி., அதிகாரிகள் அதிரடிசென்னை: ஐ.டி., அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ஜெயா டி.வி., சி.இ.ஓ., விவேக் நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக சசிகலா உறவினர்கள், வீடுகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என பல இடங்களில் ஐ.டி., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயா டி.வியின் சி.இ.ஓ,வும் இளவரசியின் மகனுமான விவேக் நிர்வாகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஐ.டி., அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கி கணக்குகள் அனைத்தும் 20க்கும்மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி கணக்குகளில் பண மதிப்பிழப்பிற்கு பின்பு பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments