அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை 'நீட்' தேர்வால் தொலைந்தது டாக்டர் கனவு

 அரியலூர் மாணவி, தூக்கிட்டு, தற்கொலை,  'நீட்', தேர்வால் தொலைந்தது ,டாக்டர் ,கனவுபெரம்பலுார்: 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால், ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சீட் கிடைக் காத விரக்தியில், அரியலுார் மாணவி அனிதா, துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.

விரக்தி

அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அனிதா, 17; தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளி. அனிதாவுக்கு, 6 வயது இருக்கும் போதே, நோய் வாய்ப்பட்ட தாய்ஆனந்தம், தரமான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.

இதனால், அனிதாவுக்கு அப்போதே டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டுள்ளது. சிறு வயது முதலே, நன்றாக படித்துள்ளார். குழுமூர் கிறிஸ்துவ மிஷினரி பள்ளியில் படித்த அனிதா, எஸ்.எஸ்.எல்.சி.,யில், 500க்கு, 478 மதிப்பெண் எடுத்தார்.பெரம்பலுார் மாவட்டம், மேல்மாத்துாரில் உள்ள ராஜவிக்னேஷ் என்ற தனியார் பள்ளியில், சலுகைக் கட்டணத்தில், பிளஸ் 1ல் சேர்ந்தார். 

விடுதியில் தங்கிப் படித்த அனிதா, பிளஸ் 2 தேர்வில், தமிழ் - 195, ஆங்கிலம் - 188, கணக்கு - 200, இயற்பியல் - 200, வேதியியல் - 199, உயிரியல் - 194 என, மொத்தம், 1,176 மதிப்பெண் பெற்றார். இவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு மெடிக்கல், 'கட்- - ஆப்' 196.5 ஆக இருந்தது.

இந்நிலையில் தான், தமிழகத்திலும் மருத்துவ மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. எவ்வித பயிற்சியும் இல்லாமல், 'நீட்' தேர்வில், அனிதா பங்கேற்று, 720க்கு, 86 மதிப்பெண் மட்டுமே பெற்றார்.இதனால், அவருக்கு மருத்துவக் கல் லுாரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு பறி போனது. ஆயினும், நீட் தேர்வை எதிர்த்து, டில்லி சென்று, உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து, போராடினார்.

நீட் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டங்களி லும் தானாக, கலந்து கொண்டு பேசினார். ஆனாலும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையிலேயே, சமீபத்தில் நடந்து முடிந்தது.அனிதாவுக்கு இடம் கிடைக்க வில்லை என்பதால், அவர் சில நாட்களாக விரக்தியாக காணப்பட்டார். நேற்று மதியம், 2 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த அனிதா, பின்பக்க தாழ்வாரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை சிறிது நேரம் கழித்தே, அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர். கதறிய அவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் துணையுடன், அனிதா உடலை கீழே இறக்கினர். கிராமமே அனிதாவின் ஓட்டு வீடு முன்திரண்டு, கதறிஅழுதது.

ஆறுதல்

கலெக்டர் லட்சுமி பிரியா, எஸ்.பி., அபிநவ்குமார் ஆகியோர், அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். செந்துறை போலீசார், அனிதா உடலை மீட்டு, பரிசோதனைக்காக, மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.'மாணவியின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்' என, குழுமூர் கிராமத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சியினருடன், குழுமூர் - செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அனிதாவின் தந்தை சண்முகம் கூறியதாவது:

என் மனைவி நோய்வாய்பட்டு சிறு வயதிலேயே இறந்து விட்டார். நம் குடும்பத்தில் ஒருவரையாவது டாக்டர் ஆக்க வேண்டும் என, மூட்டை துாக்கி, நான்கு மகன்கள் மற்றும் மகள் அனிதாவை நன்றாக படிக்க வைத்தேன்.பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வு நடைமுறையால், என் மகள் டாக்டர் ஆகும் கனவு, கானல் நீராகிப் போனது. என் மகள் போலவே, பல ஏழை மாணவர்களின் எதிர்கால மும் கேள்விக்குறியாகி விட்டது. என் மகளுக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது.

என் மகளின் சாவுக்கு நாட்டை ஆள்பவர்களே காரணம். இந்த அரசாங்கம், இனியாவது நீட் தேர்வு நடைமுறையை ரத்து செய்து, மதிப்பெண் அடிப் படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

'அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்'

''மாணவி அனிதா குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசு செய்யும்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.மாணவி அனிதா தற்கொலை குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

எந்த காரணத்துக்காகவும், மாணவர்கள், இது போன்ற முடிவை எடுக்கக் கூடாது. 'நீட்' தேர்வு எழுத, மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வாய்ப்பு உள்ளன. இதனால், இந்தாண்டு கடைசி வாய்ப்பாக, மாணவர்கள் கருத வேண்டாம். கடந்த ஆண்டு இடம் கிடைக்காதவர்கள், இந்தாண்டு தேர்வு எழுதி, மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனர்.

அனிதா போன்ற மாணவியரும், மருத்துவ இடங்கள் பெற, தமிழக அரசு தொடர்ந்து போராடியது. மாணவர்களுக்கு, அடுத்தடுத்து வாய்ப்புகள் உள்ளதால், இதுபோன்ற முடிவை தவிர்க்க வேண்டும். அனிதா குடும்பத்துக்கு, தேவையான அனைத்து உதவிகளையும், தமிழக அரசு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இந்த மாணவிக்கு, அனைத்து தகுதியும் இருந்தது. வருங்காலங்களில் அவர், முயற்சி செய்திருந்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பார்.மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவது, அரசின் கடமை.இதற்காக, தமிழக அரசு, நீட் தேர்வை எதிர்த்து, கடைசி வரை போராடியது. மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியூட் டும் செய்தி. மாணவர்களுக்கு, இது கடைசி வாய்ப்பு அல்ல. அதனால், இதுபோன்ற செயல் களை, மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்

'மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில், தற்கொலை செய்து கொண்ட, மாணவி அனிதா குடும்பத்திற்கு, ஏழு லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு வருக்கு, கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணியும் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

அரியலுார் மாவட்டம்,செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்தை சேர்ந்த, சண்முகம் மகள் அனிதா இறந்த செய்தி அறிந்து, மிகவும் துயரம் அடைந்தேன்.அவரது குடும்பத்திற்கு, ஏழு லட்சம் ரூபாய்,முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கஉத்தரவிட்டுள் ளேன். மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு வருக்கு, கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படும்.மாணவர்கள், இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். ஜெ., அரசு, மாணவர்களின் நலனில், எப்போதும் அக்கரையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Comments