கேரள முதல்வரை சந்தித்த பின்னர் சென்னை திரும்பிய நடிகர் கமலிடம் அரியலூர் மாணவி அனிதா இறப்பு குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது: மாணவியின் தற்கொலை போன்று இனியும் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அனிதாவின் மரணம் சோகமானநிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தோல்விதான் முடிவு என மாணவர்கள் நினைத்து மனம் தளர்ந்து விட வேண்டாம்.தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். நேர்மையான முறையில் போராடுவோம் . அவரின் மரணத்தை கண்டு கண்ணீரோடு கோபமும் வரத்தான் செய்கிறது என கூறினார்.
Comments