தமிழகத்தில், 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரும் வழக் கில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும் படி, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் கமிஷ னுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 நாட்களுக்குள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், 15 நாட்களுக் குள் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள் ளதா' என, அமர்வு கேட்டுள்ளது.
''எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை,'' என, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.ஆர்.ஜெய சுகின் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக் கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் அதன் செயலர், கே.கே.ரமேஷன் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், 2016, அக்., 24 முதல், உள்ளாட்சிஅமைப்புகள் காலி யாக உள்ளன. ஓராண்டு முடிவடைய உள்ள நிலை யில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் முன் வரவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும், இந்தத் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தயங்குகிறது. இது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில், தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில், சிறப்பு அலுவலர்களே நிர்வகித்து வருகின்றனர். அவர்களுடைய பதவிக் காலம், இந்தாண்டு, டிச., 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இழுத்தடிப்பு
இது, தேர்தலை திட்டமிட்ட நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற, தமிழக மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.தேர்தலை நடத்தா மல் இழுத்தடிப்பு செய்து வருவதால், தமிழக மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகள்ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவுமே நடக்க வில்லை.பல போராட்டங்கள் நடத்தியும், உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முன்வரவில்லை.
வார்டுகள் எல்லையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கையே. அதனால், 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர் தலை நடத்த, தமிழக அரசுக்கும், மாநில தேர் தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில் 6ம் தேதி விசாரணை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மற்றொரு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், 6ல் விசாரணைக்கு வர உள்ளது.கடந்த, 2001 மக்கள் தொகையின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில், 2016ல் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்தது. 'கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை விபரம், மாநில அரசுக்கு, 2013ல் அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், 2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Comments