
புதுடில்லி: சிக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ள டோக்லம் பகுதியில், நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: டோக்லம் பகுதியில் கடந்த, 70 நாட்களாக இரு நாடுகளின் சார்பிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளின் சார்பில் தூதரக ரீதியாக டோக்லம் பிரச்னை குறித்து பேசப்பட்டது. அப்போது இரு தரப்பு கருத்துக்கள், கவலைகள், விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து டோக்லம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கூடுதல் படைகளை வாபஸ் பெறுவது என இரண்டு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments