எடப்பாடி ஆட்சியை விட்டு வைக்க கூடாது; ஸ்டாலின்

ஸ்டாலின், குட்கா, உரிமை மீறல், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கவர்னர், சபாநாயகர் தனபால்சென்னை: திமுகவை பொறுத்தவரை எடப்பாடி ஆட்சியை விட்டு வைக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியால், வரும் 28 ல் சட்டசபை உரிமை மீறல் குழு கூடுகிறது. ஆட்சியை பொறுத்த வரையில் மெஜாரிட்டி இழந்திருக்கும் ஆட்சி. தார்மீக உரிமையை இழந்திருக்கும் ஆட்சி.குட்கா விவகாரத்தில் சட்டசபையில்நான் காண்பித்தது உண்மை. இதன் பிறகு, சென்னை புறநகர் பகுதிகளில், பல மாவட்டங்களில் குட்கா விற்பனை இடத்தில் ரெய்டு நடத்தி, அதனை பறிமுதல் 1000 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், சட்டசபை உரிமை மீறல் கூடுகிறது. ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அழைக்கின்றனர். எதையாவது சாப்பிட்டு பித்தத்தை தணிக்க முயற்சி செய்கின்றனர். இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்.ஆட்சி கலைக்க வேண்டும் என கனகராஜ் கூறுகிறார். முதல்வரை மாற்ற வேண்டும் என 19 எம்.எல்.ஏ.,க்களை கூறியுள்ளனர். எங்களை பொறுத்தவரை, இந்த ஆட்சியை விட்டு வைக்க கூடாது. குதிரை பேர ஆட்சி நடக்கிறது. துகளக் தர்பார் நடக்கிறது. ஆட்சியை தக்க வைக்க சிந்தனை செய்கிறார்களே தவிர, மக்கள், ஆட்சி பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வேண்டுகோள்:

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டவிரோத அமைச்சரவை நீடிக்கவும், ஜனநாயக படுகொலை நடக்கவும் கவர்னர் இடம் தரக்கூடாது. சட்டசபையை கூட்டி அரசின் மெஜாரிட்டியை நிருபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். 19 எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால் எடப்பாடி அரசுக்கு மெஜராரிட்டி இல்லை. இந்நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு உத்தரவிடாமல், கவர்னர் மும்பை சென்று விட்டார். தாமதத்தை பயன்படுத்தி ஆட்சியை தக்க வைக்க 19 பேருக்கு பதவி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரிடம் எம்எல்ஏ மனு அளித்தது கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி, சபாநாயகர் தனபால் இணைந்து ஜனநாயக படுகொலை நடத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments