திமுக ஆட்சி அமைய தினகரன் வெளியில் இருந்து ஆதரவு தர வாய்ப்பு உள்ளது: சு.சுவாமி

 Pro-TTV Dinakaran MLA's support to DMK in TN Assembly, says Subramanian swamy டெல்லி: திமுக ஆட்சி அமைய தினகரன் வெளியில் இருந்து ஆதரவு தர வாய்ப்பு உள்ளது என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆட்சியை யாரும் உடைக்க முடியாது. தேர்தல் வருவதை யாரும் விரும்பவில்லை.

ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் வெறுப்பு எதுவும் இல்லை. ஆகையால் ஸ்டாலின் ஆட்சி அமைக்க தினகரன் வெளியில் இருந்து ஆதரவு தர வாய்ப்புள்ளது.

தினகரனுக்கு இப்போது 24 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இது 34 ஆக அதிகரிக்கும். திமுகவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பதால் பதவி பறிபோகாது.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Comments