சென்னை வந்தார் கவர்னர்

கவர்னர், வித்யாசாகர் ராவ்,சென்னை, திமுக, துரைமுருகன்சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தார் . எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அண்ணா பல்கலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் சென்னைவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments