முதல்வர் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்துள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், அவர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரன் தரப்பினர் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, அவரது அறையில் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபாநாயகருடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போன்று சபாநாயகர் தனபாலும் கொறடாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Comments