தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையே: சுப்ரீம் கோர்ட்

தனி மனித ரகசியம், Personal secret, சுப்ரீம் கோர்ட், Supreme Court, ஆதார், Aadhaar, அந்தரங்கம், privacy, தீர்ப்பு,  judgment, அரசியல் சாசனம், constitution,புதுடில்லி: தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில்,அதில், தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே. தனி மனித சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படையில் வருகிறது. தனி மனித ரகசியம் என்பது அரசியல் சாசனப்பிரிவு 21ல் பாதுகாக்கப்பட்டது என ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினர்.

Comments