தனி மனித ரகசியம் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு

தனி மனித ரகசியம், சிதம்பரம், காங்கிரஸ், சுப்ரீம் கோர்ட்புதுடில்லி: தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி: தனி மனித உரிமை பாதுகாத்தே ஆதார் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய அரசு, அரசியல்சாசன சட்டத்தின் 21வது பிரிவில் தலையீட்டு, தனிமனித சுதந்திரத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. ஆதார் நோக்கத்தில் தவறு இல்லை. ஆனால், ஆதாரை ஒரு கருவியாக வைத்து நல்ல வழியில் அல்லது தவறான வழியில் பயன்படுத்தவதில் அரசின் திட்டத்தில் தவறு உள்ளது. தனி மனித ரகசியம் அடிப்படை உரிமை. கடந்த 1947 ல் பெற்ற அந்த சுதந்திரம், வளப்படுத்தியுள்ளது. பெரிதாக்கியது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால்: முக்கியமான இந்த தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா:வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. தனி மனித சுதந்திரத்திற்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா: தனி மனித ரகசியம் அடிப்படை உரிமை என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். சுப்ரமணியன்சுவாமி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். தற்போது ஆதாரில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Comments