இன்றைய அரசியல்வாதிகள் கஜானா திருடர்கள் கோவையில் நடிகர் கமல் ஆவேசம்

அரசியல்வாதிகள்,politicians,  கஜானா திருடர்கள் , exchequer 
thieves, நடிகர் கமல், actor Kamal,ரத்த தானம்,  blood donation,கண் தானம், eye donation, கமல்ஹாசன், Kamal Haasan,கோவை:''மக்கள் கொடு, கொடு என கேட்ட தால், கஜானாவில் பெரும் பங்கை அரசியல் வாதிகள் திருடிவிட்டனர். இந்த அரசியல் சூழல் தொடர்வது அவமானம். இதை மாற்ற வேண்டி யது நமது கடமை,'' என, நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கோவை ஈச்சனாரியில், தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்த திருமணம் சாதி, மொழி கடந்த திருமண மாகும். இவர்கள் (ரசிகர்கள்), 37 ஆண்டுகளாக ரசிகர்களாக உள்ளனர். இதில், 30 ஆண்டுகள் நற்பணிகளை செய்து வருகின்றனர். 

அன்று இதை கண்டு வியந்தவர்கள், இன்று, 'ரத்த தானம், கண் தானம் செய்தால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா' என கேள்வி கேட்கின்றனர். அவர்களை பார்த்து எனக்கு கோபம் வரவில்லை; சிரிப்புதான் வருகிறது.நாங்கள் யாரிட மும் அதை செய்தோம், இதை செய் வோம் என கூறி, எதையும் கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டோம். நற்பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனி, தனிதலைவர்களாவர். எங்கள் பணியை அமைதியாக தொடர்ந்து செய்வோம்.

'உங்களை அரசியல்வாதி ஆக்குகிறேன், கோட்டைக்கு அழைத்துச் செல்கிறேன்' என நான் சொல்லியா இதை செய்தீர்கள், இல்லை. இன்றைய அரசியல் சூழலை கண்டு அவமானப்பட வேண்டி உள்ளது. இதை இப்படியே விட்டுவிடாமல், மாற்ற வேண்டியது நமது கடமை.வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல, அரசியல்வாதிகள். உங்கள் தெரு, வட்டாரத்திலிருந்து உங்களால் உருவாக்கப் பட்டவர்கள். நீங்கள் கொடு, கொடு என கேட்டதால், கஜானாவிலிருந்து பெரும் பங்கை திருடிவிட்டனர்.

சிறு சோற்றை, பருக்கையை உங்களுக்கு கொடுத் துள்ளனர்.திருடர்களை நீங்கள் உருவாக்கியுள்ளீர் கள், செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள். இனிமேல் செய்யமாட்டோம் என உறுதி எடுங்கள். 

ஓட்டுக்காக, 500, 1,000 ரூபாய் வாங்கினீர்கள். இதனால் உங்களது ஐந்தாண்டு கால வாழ்க்கையை அடகு வைத்துவிட்டீர்கள். இதனால் எனக்கு கோபம் தான் வருகிறது. இது, என்னை அடையாளப் படுத்தி கொள்ள அல்ல. உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக. என்னை தலைமையேற்க வாருங்கள் என் கிறீர்கள். நான் கேட்கிறேன், நீங்கள் தலைமை ஏற்க தைரியம் உள்ளதா? வரும் தலைமுறை க்கு துாய சுற்றுச் சூழல், நீர், காற்றை தர வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. அதற்கேற்ப செயல்படுங்கள். விழித்திருங்கள். பசித்திருங் கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள், போராடுங்கள்.

உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள் ளுங்கள். அப்போது தான் மற்றவர்களை பார்த்து கேள்வி கேட்க முடியும்.இவ்வாறு, நடிகர் கமல ஹாசன் பேசினார்.

Comments