கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். இதை போல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் அமைச்சர்கள் தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும், வெல்லமண்டி நடராஜன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments