ராம் ரஹீம் சொத்துக்கள் முடக்க அரியானா, பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு

 ராம் ரஹீம், சொத்துக்கள்,முடக்க ,அரியானா, பஞ்சாப் , ஐகோர்ட் உத்தரவுசண்டிகர்: பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ராம் ரஹீமின் சொத்துக்களை முடக்க அரியானா, பஞ்சாப் ஐகோர்ட்டுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெண் பக்தை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. 25 பேர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 

சொத்துக்களை முடக்க உத்தரவு

பஞ்ச்குலா, பெரோஸ்பூர், சோனாபட், சிர்சா, பர்னாலா, சங்ரூர், சண்டிகார் தேசிய நெடுஞ்சாலை , டில்லி உள்ளிட்ட 50க்கும் மேற்ப்டட இடங்களில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு ராம் ரஹீமின் சொத்துக்களில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராம்ரஹீமின் ஆசிரமங்கள் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கலவரத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அரியானா மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மாநில டி.ஜி.பி. பி.எஸ். சாந்து தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

236 ரயில்கள் மாற்று பாதையில்

டில்லியில் இருந்து அரியானா மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்ந்து நீடித்துவருவதன் காரணமாக 236க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. 

மாநில முதல்வர் எச்சரிக்கை

சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என அரியானா மாநிலமுதல்வர் மனோகர் லால் கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலத்திலும் கலவரம் பரவாமல் தடுப்பதற்காக மாநிலத்தின் முசாபர் நகர் பாக்பத் நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அதுபோல உ.பி.யின் மற்றொரு நகரான ஷம்லியிலும் டில்லி எல்லைப்பகுதியான நொய்டாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments