சென்னை, அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:'உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல முடியாது' என, கவர்னர் கூறியது பற்றி?
பன்னீர்செல்வம், 10 எம்.எல்.ஏ.,க்களை வைத்து, சட்டசபையை கூட்ட சொன்னபோது, அது உட்கட்சி விவகாரம் என்பது, அவருக்கு தெரியவில்லை.
கவர்னர், அரசியல் செய்கிறார் என நினைக்கிறீர்களா?நிச்சயமாக. மத்திய அரசு அதிகாரத்தைப் பயன் படுத்தி, வருமான வரித்துறை, அமலாக்கதுறை வாயிலாக, ஆட்சியில் இருப்பவர் களை மிரட்டி, அடி பணிய வைத்திருக்கிறது. அதன் படி, இந்த ஆட்சி நடக்கிறது.
ஜனாதிபதியை, தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்திப்பது, எந்தளவிற்கு பயன்அளிக்கும்?
பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் சந்திக்கி றோம்.ஜனநாயக முறையில் பணியாற்றுவது, அவர்களுடைய கடமை.அதை செய்யவில்லை என்றால், சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
கவர்னரின் நடவடிக்கையில், பா.ஜ., தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா?
அதில் சந்தேகமேயில்லை. பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் கைகளையும் சேர்த்து வைத்து, ஒரு துண்டைப் போட்டு, மீனுக்கு விலைபேசும் வியாபாரம் போல, கவர்னர் செய்திருக் கிறார். இது, கவர்னர் என்ற பொறுப்புக்கும், ஜனநாயகத்திற் கும் பெரும் இழுக்கு.
உயர் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக, தி.மு.க., பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறாரே? நாங்கள், நீதி மன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற, என்றைக்கும் முயற்சித்தது கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
'கடமை தவறுகிறார்':ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: 'முதல்வர் பழனிசாமி அரசு, பெரும்பான் மையை இழந்து விட்டதாக, கருதுவதற்கு இடமில்லை' என, கவர்னர் தெரிவித்திருப்பது, அரசியல் சட்ட பதவியில் அமர்ந்து, ஜனநாயக படு கொலைக்கு பச்சைக் கொடி காட்டுவது போல உள்ளது.
அரசியல் சட்ட கடமைகளில் இருந்தும், தார்மீக பொறுப்பிலிருந்தும், கவர்னர் தவறிச் செல்வது, ஜனநாயகத்தின் மிக மோசமான இருண்ட பக்கங்களாகவே அமையும். '19 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, சபாநாயகரே, 'நோட்டீஸ்' கொடுத்த பின், அவர்கள், அ.தி.மு.க.,வில் தான் இருக்கின்றனர் என கவர்னர் கூறுவது, வியப்பை அளிக்கிறது.
அவர்கள், அ.தி.மு.க., வில் இருக்கின்றனர் என்றால், சபாநாயகர் ஏன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments