இந்த கூட்டத்திற்கு, புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சுமார் 30 எம்.எல்.ஏ.,க்கள் வரை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக் குழுவை எப்போது கூட்டுவது, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் அளித்துள்ள மனு மற்றும் திமுக அளித்துள்ள கோரிக்கையை ஏற்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய 1.30 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை,
1. பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு செய்வது.
2. சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்குவது.
3. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரனுக்கு யாரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, நியமிப்பதற்கோ உரிமை இல்லை. சசிகலா மற்றும் தினகரனின் கட்சி நடவடிக்கைகள் செல்லாது.
4. ஜெ.,வால் துவங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா டிவி.,யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments