சொத்துக்களை வாங்கி குவித்த வீரமணி: வெற்றிவேல்

தினகரன், எம்.எல்.ஏ., வெற்றிவேல், அமைச்சர், வீரமணி, குருமூர்த்தி, மறைமுக முதல்வர்
சென்னை: '' அமைச்சர் வீரமணி உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்,'' என, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறினார்.
சென்னை, அடையாறில் அவர் கூறியதாவது:

தினகரன் நியமனங்கள் செல்லும்

முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சாவு வீடு போல் மவுனமாக அமர்ந்து இருந்தனர். பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் நியமனத்திற்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டவர்கள் அவர்கள். தினகரன் துணை முதல்வராக வேண்டும் என கூறியவர் தங்கமணி. முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தேர்தலில், தொப்பி சின்னத்திற்கு ஓட்டு கேட்டவர். எனவே, தினகரன் செய்யும் நியமனங்கள் செல்லும். திண்டுக்கல் சீனிவாசன், கோமாளிதனமாகவே பேசுகிறார். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகையை, கட்சி உடைமையாக்குவதில் தவறு ஒன்றும் இல்லை. அதுபோல், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துக்களை, பினாமி சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைக்க தயாரா?

அமைச்சர் வீரமணி மீது புகார்

குருமூர்த்தி வீட்டிற்கு இவர்கள் சென்றது உண்மை. அவர் மறைமுக முதல்வராக செயல்படுவதும் உண்மை. முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் செல்லாது. அரசை வைத்து எங்களை மிரட்ட பார்க்கின்றனர். தேர்தல் கமிஷன் என்பது கட்டப்பஞ்சாயத்து அமைப்பு அல்ல. அங்கு ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற முடியாது. அவர்கள் செய்வதும் அனைத்தும் சட்டரீதியானவை அல்ல. அவர்கள் செயல்கள் கோமாளித்தனமானவை. கவர்னர் முடிவிற்காக காத்து இருக்கிறோம். அமைச்சர் வீரமணி சொத்துக்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்துள்ளார். தனது உறவினர்கள் பெயரில், 120 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். இவ்வாறு எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறினார்.

Comments