அதிருப்தி:
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர் செல்வம் அணி இணைப்புக்கு பின், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து அனைவரும் புதுச்சேரியில் உள்ள, 'தி விண்ட் பிளவர் ரிசார்ட்' என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரும் தங்கவைக்கப்பட்டனர்.
நிறைவு:
கடந்த 4 நாட்களாக அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்கள் வாக்கிங் செல்வது, விளையாடுவது, வகை வகையான உணவுகள் என ஹாயாக இருந்து வந்தனர். இந்நிலையில், முன்பதிவு செய்த காலம், மதியம் 12 மணியுடன் நிறைவடைந்ததால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வேறு சொகுசு விடுதிக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள சன்வே தனியார் சொகுசு விடுதிக்கு இன்று மாறினர்.
தினகரன் வருகை:
முன்னதாக தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி: எங்களை சந்திக்க தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார். தீர்வு கிடைக்காமல் புதுச்சேரியிலிருந்து கிளம்பி செல்ல மாட்டோம். ஏற்கனவே ஆன்லைன் மூலம் தங்கியிருந்த அறைகள் புக் செய்யப்பட்டதால், வேறு ரிசார்ட்டிற்கு செல்கிறோம். ஓபிஎஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? முதல்வரை மாற்ற வேண்டும் எனக்கூறியது தவறா? இவ்வாறு அவர் கூறினார்.
Comments